Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல்.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கையொன்று உடைமை பெறின்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout