Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 831

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

pEtaimai enpaton RiyAtenin EtangkoNTUtiyam pOka viTal

Gaayathri Parvatha Lakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறியாமை அல்லது பேதைமை என்பது என்னவென்றால், தனக்கு நன்மையும் புகழும் தரக்கூடிய நற்பயன்களைக் கைவிட்டுவிட்டு, கேடும் பழியும் விளைவிக்கும் தீய காரியங்களை விரும்பி ஏற்றுக்கொள்வதேயாகும்.

• பேதைமை என்பதொன்று யாதெனின் = பேதைமை என்பது யாதென்றால்,• ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல் = தனக்குக் கேடானதை ஏற்றுக்கொண்டு நன்மை தருவதைக் கைவிடுவதேயாகும்.

மு.வரதராசன்

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

பரிமேலழகர்

பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

Meaning in English

What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout