பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.
pakainaTpAng kAlam varungkAl mukanaTTakanaT porIi viTal
Francis Xavier
பொருள் / உரை
முருகா எளிய உரை
சூழ்நிலை காரணமாகப் பகைவர் நண்பரைப் போல் பழகி வரும் காலம் நேர்ந்தால், நாமும் முகத்தளவில் மட்டும் நட்பு காட்டி, உள்ளத்தால் அந்த நட்பை அடியோடு நீக்கிவிட்டுத் தக்க சமயம் வந்ததும் அந்தத் தொடர்பையும் கைவிட்டுவிட வேண்டும்.
• பகை நட்பாம் காலம் வருங்கால் = பகைவர் நண்பராக வேடமிட்டு வரும் காலம் நேர்ந்தால்,• முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் = முகத்தளவில் மட்டும் நட்புக் காட்டி, உள்ளத்தில் அந்நட்பை நீக்கி விலகிட வேண்டும்.
மு.வரதராசன்
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
பரிமேலழகர்
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
Meaning in English
When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear





