பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கட் செயல்.
pEtaimaiyuL ellAm pEtaimai kAtanmaikaiyalla tankaN seyal
Swathi Renganath
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறியாமைகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய பெரும் அறியாமை என்னவென்றால், தன் தகுதிக்கும் நற்பண்புக்கும் பொருந்தாத தகாத செயல்களின் மீது பெருவிருப்பம் கொண்டு ஈடுபடுவதேயாகும்.
• பேதைமையுள் எல்லாம் பேதைமை = மூடத்தனங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய மூடத்தனம்,• கையல்ல தன்கண் காதன்மை செயல் = தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாத தகாத செயல்களை விரும்பிச் செய்வதேயாகும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
பரிமேலழகர்
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
Meaning in English
'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove





