Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 833

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்

nANAmai nATAmai nArinmai yAtonRumpENAmai pEtai tozhil

Rajalakshmi

பொருள் / உரை

முருகா எளிய உரை

பழி பாவங்களுக்கு நாணாமல் இருத்தல், நன்மையானவற்றை ஆராய்ந்து தேடாமல் இருத்தல், யாரிடமும் அன்பில்லாமல் இருத்தல், பாதுகாக்க வேண்டிய நற்பண்புகளைப் போற்றாமல் இருத்தல் ஆகிய நான்கும் பேதையின் குணங்களாகும்.

• நாணாமை நாடாமை நாரின்மை = பழிக்கு வெட்காமை, நன்மையை நாடாமை, அன்பில்லாமை,• யாதொன்றும் பேணாமை பேதை தொழில் = நற்பண்புகளைப் பேணாதிருத்தல் ஆகியவையே மூடனின் செயலாகும்.

மு.வரதராசன்

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

பரிமேலழகர்

நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)

சாலமன் பாப்பையா

தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.

Meaning in English

Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his part

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout