Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 835

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

orumais seyalARRum pEtai ezhumaiyumtAnpuk kazhuntum aLaRu

Amreith Venkatesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவில்லாத மூடன், தான் வாழும் இந்த ஒரே ஒரு பிறவியிலேயே செய்யும் கொடிய தீய செயல்களின் மூலம், வரும் ஏழு பிறவிகளிலும் தான் மூழ்கித் தவிக்க வேண்டிய பெருந்துன்பத்தைத் தேடிக்கொள்வான்.

• பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு = மூடன் தான் ஏழு பிறவியிலும் மூழ்கித் தவிக்கும் நரகத்தை,• ஒருமைச் செயலாற்றும் = தான் வாழும் இந்த ஒரே பிறவியின் பாவச் செயல்களாலேயே தேடிக்கொள்வான்.

மு.வரதராசன்

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

பரிமேலழகர்

பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

Meaning in English

The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout