Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 836

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.

poypaTum oLRO punaipUNum kaiyaRiyAppEtai vinaimER koLin

Pragathi Guruprasad

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• கையறியாப் பேதை வினைமேற்கொளின் = செய்யும் வழிமுறை அறியாத மூடன் செயலை மேற்கொண்டால்,• பொய்படும் ஒன்றோ புனைபூணும் = அச்செயலும் பாழாகும்; தானும் சிறைத் தளையினைப் பூண்டு அழிவான்.எளிய விளக்கம்:ஒரு செயலைச் செய்யும் சரியான வழிமுறையை அறியாத மூடன் ஒரு காரியத்தை மேற்கொண்டால், அந்தச் செயலும் பாழாகிப் பொய்த்துப் போகும்; அதுமட்டுமல்லாமல், அவனும் குற்றவாளியாகச் சிறைத்தளை பூண்டு அழிவான்.

மு.வரதராசன்

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

பரிமேலழகர்

கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

Meaning in English

When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout