Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 837

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.

EtilAr Arat tamarpasippar pEtaiperunjselvam uRRak kaTai

Deepa Ramachandran

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவில்லாத மூடன் ஒருவன் எதிர்பாராமல் பெரும் செல்வத்தைப் பெற்றுவிட்டால், அவனோடு தொடர்பில்லாத போலிப் புகழ்ச்சியாளர்கள் அதை அனுபவிக்க, அவனையே நம்பியுள்ள சொந்த உற்றாரோ பசியால் வாடி வதங்குவர்.

• பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை = மூடன் பெரும் செல்வத்தைப் பெற்ற காலத்தில்,• ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் = தொடர்பற்ற அந்நியர் அனுபவிக்கச் சொந்த உற்றார் பசியால் வாடுவர்.

மு.வரதராசன்

பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.

பரிமேலழகர்

பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.

Meaning in English

When fools are blessed with fortune's bounteous store, Their foes feed full, their friends are prey to hunger sore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout