Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 839

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.

peritinitu pEtaiyAr kENmai pirivinkaNpIzhai taruvaton Ril

Mukundan Narasimhan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• பேதையார் கேண்மை பெரிதினிது = மூடரின் நட்பு மிகவும் இனிமையானது என்று சொல்லப்படும்,• பிரிவின்கண் பீழை தருவதொன்றில் = ஏனெனில் அவரிடமிருந்து பிரியும் போது ஒரு துன்பமும் உண்டாகாது.எளிய விளக்கம்:அறிவில்லாத மூடர்களோடு பழகும் நட்பானது மிக இனியது என்று நகைச்சுவையாகக் கூறப்படும்; ஏனெனில், அவர்களை விட்டுப் பிரியும்போது உள்ளத்தில் எந்தத் துன்பமும் உண்டாகாமல் பெரும் நிம்மதியே கிடைக்கும்!

மு.வரதராசன்

பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

பரிமேலழகர்

பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!

Meaning in English

Friendship of fools is very pleasant thing, Parting with them will leave behind no sting

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout