Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 840

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.

kazhAakkAl paLLiyuL vaittaRRAR sAnROrkuzhAattup pEtai pukal

Vijayaa Shanker

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவுடைய சான்றோர்கள் கூடியுள்ள சபையிலே ஒரு மூடன் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்துவிட்டுக் கழுவாத அசுத்தமான காலைத் தூய்மையான படுக்கையில் வைப்பதைப் போன்று அச்சபையையே அசுத்தப்படுத்தி இழிவுபடுத்துவதாகும்.

• சான்றோர் குழாத்துப் பேதை புகல் = சான்றோரின் சபையில் மூடன் நுழைவது,• கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் = அசுத்தமான காலைக் கழுவாமல் படுக்கையில் வைப்பது போன்றதாகும்.

மு.வரதராசன்

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

பரிமேலழகர்

சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

Meaning in English

Like him who seeks his couch with unwashed feet, Is fool whose foot intrudes where wise men meet

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout