Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 841

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.

aRivinmai anmaiyuL inmai piRitinmaiinmaiyA vaiyA tulaku

Rohith

பொருள் / உரை

முருகா எளிய உரை

இல்லாமைகள் எல்லாவற்றிலும் மிகக் கொடிய இல்லாமை ஒருவனுக்கு நல்லறிவு இல்லாமல் இருப்பதேயாகும்; பொன் பொருள் இல்லாத வறுமையை உலகம் அத்தகைய பெரிய இல்லாமையாகக் கருதாது.

• அறிவின்மை இன்மையுள் இன்மை = இல்லாமைகள் பலவற்றுள்ளும் கொடிய இல்லாமை அறிவில்லாமையே,• பிறிதின்மை இன்மையா வையாது உலகு = பொருள் இல்லாமையை உலகம் கொடிய வறுமையாகக் கருதாது.

மு.வரதராசன்

அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

பரிமேலழகர்

இன்மையுள் இன்மை அறிவின்மை - ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் மிக்க இல்லாமையாவது அறிவில்லாமை; பிறிது இன்மை இன்மையா வையாது உலகு - மற்றைப்பொருள் இல்லாமை யோவெனின், அதனை அப்பெற்றித்தாய் இல்லாமையாகக் கொள்ளார் உலகத்தார். (அறிவு என்பது ஈண்டுத் தலைமைபற்றி நல்லறிவின்மேல் நின்றது. புல்லறிவாளர் செல்வம் எய்தியவழியும் இம்மை மறுமைப் பயன் எய்தாமையின், அதனை 'இன்மையுள் இன்மை' என்றும் நல்லறிவாளர் வறுமையெய்திய வழியும் அஃது இழவாமையின் அதனை 'இன்மையா வையாது' என்றும் கூறினார். இதனான், புல்லறிவினது குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

Meaning in English

Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout