Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 842

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.

aRivilAn nenjsuvan tItal piRitiyAtumillai peRuvAn tavam

Harikaran R K

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவில்லாத புல்லறிவாளன் எப்போதாவது மனம் மகிழ்ந்து ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுத்தால், அதற்குக் காரணம் அவனது ஈகை அல்ல; அப்பொருளைப் பெறுகின்றவன் செய்த நல்வினைப் பயனே (தவமே) ஆகும்.

• அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் = அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து கொடுப்பதற்கு,• பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் = பெறுகின்றவனின் நல்வினையே காரணமே தவிர வேறொன்றுமில்லை.

மு.வரதராசன்

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

பரிமேலழகர்

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் ஒருவனுக்கு மனம் உவந்து ஒன்று கொடுத்தல் கூடிற்றாயின்; பெறுவான் தவம் பிறிது யாதும் இல்லை - அதற்குக் காரணம் பெறுகின்றவன் நல்வினையே, வேறொன்றும் இல்லை. (ஒரோ வழி நெஞ்சு உவந்து ஈதல் கூடலின் 'புல்லறிவாளரும் நல்வினை செய்ப' என்பார்க்குப் 'பெறுவான் வீழ் பொருள் எய்தியான் போல்வதல்லது, இம்மை நோக்கியாக மறுமை நோக்கியாக ஈகின்றார் அல்லர்' எனக் கூறியவாறு. கூடிற்றாயின், அதற்குக் காரணம் என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. இதனான், அஃதுடையார் தம்மாட்டு நல்லன செய்தலறியாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.

Meaning in English

The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance bought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout