Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 843

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.

aRivilAr tAntammaip pIzhikkum pIzhaiseRuvArkkum seytal aritu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை = மூடர் தமக்குத்தாமே செய்துகொள்ளும் துன்பமானது,• செறுவார்க்கும் செய்தல் அரிது = அவருடைய கொடிய பகைவராலும் செய்துவிட முடியாததாகும்.எளிய விளக்கம்:அறிவில்லாத மூடர்கள் தங்கள் மடமைச் செயல்களால் தங்களுக்குத் தாமே வருவித்துக்கொள்ளும் துன்பமானது, அவர்களை அழிக்க நினைக்கும் கொடிய எதிரிகளாலும் கூட அவர்களுக்குச் செய்துவிட முடியாத பெரும் வேதனையாகும்.

மு.வரதராசன்

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

பரிமேலழகர்

அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவுடையார் தாமே தம்மை வருத்தும் வருத்தம்; செறுவார்க்கும் செய்தல் அரிது - அது செய்தற்குரியராய தம் பகைவர்க்கும் செய்தல் அரிது. (பகைவர் தாம் அறிந்ததொன்றனைக் காலம் பார்த்திருந்துசெய்வதல்லது வறுமை, பழி, பாவம் முதலிய பலவற்றையும்எக்காலத்தும் செய்யமாட்டாமையின், அவர்க்கும் செய்தல்அரிதென்றார். இதனான் அவர் தம் மாட்டும் தீயன செய்தல்அறிவர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.

Meaning in English

With keener anguish foolish men their own hearts wring, Than aught that even malice of their foes can bring

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout