Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 844

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.

veNmai enappaTuva tiyAtenin oNmaiuTaiyamyAm ennum serukku

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

புல்லறிவுடைமை அல்லது மூடத்தனம் என்பது என்னவென்றால், 'நாங்கள் மட்டுமே சிறந்த பேரறிவு படைத்தவர்கள்' என்று ஒருவன் தன்னைத்தானே உயர்வாக எண்ணிக்கொள்ளும் அகந்தைக் கர்வமேயாகும்.

• வெண்மை எனப்படுவது யாதெனின் = புல்லறிவு என்று சொல்லப்படுவது யாதென்றால்,• ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு = 'நாங்களே பேரறிவு படைத்தவர்கள்' என்று ஒருவன் கொள்ளும் கர்வமாகும்.

மு.வரதராசன்

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

பரிமேலழகர்

வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறிவுடைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - அது தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையம் என்று நன்கு மதிக்கும் மயக்கம். (வெண்மையாவது அறிவு முதிராமை. ஒண்மை எனக் காரியப் பெயர் காரணத்திற்காயிற்று. உலகத்தார் இகழ்தல் அறிந்து வைத்தும் அவ்வாறு மதித்தலான், 'மயக்கம்' என்றார்.)

சாலமன் பாப்பையா

அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

Meaning in English

What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout