Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற்கூற்றே மருந்து.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout