Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 942

பொருட்பால்அங்கவியல்95. மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.

maruntena vENTAvAm yAkkaik karuntiyataRRatu pORRi uNin

தமிழ்ப்பித்தர்கள்

பொருள் / உரை

முருகா எளிய உரை

முன்பு உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டதை உடலின் இலகுவான தன்மையால் உறுதி செய்து, அதன்பின் பசித்து அளவோடு உண்டால் உடலுக்கு மருந்து என்று தனியாக ஒன்றும் தேவையில்லை.

• அருந்தியது = முன்பு உண்ட உணவு,• அற்றது போற்றி = செரித்துவிட்டதை உடலின் குறிகளால் நன்கு அறிந்து,• உணின் = அளவோடு உண்டால்,• யாக்கைக்கு = இந்த உடம்பிற்கு,• மருந்தென வேண்டாவாம் = மருந்து என்று ஒன்று தனியாகத் தேவையில்லை.

மு.வரதராசன்

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

பரிமேலழகர்

அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். (குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.)

சாலமன் பாப்பையா

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Meaning in English

No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout