Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 943

பொருட்பால்அங்கவியல்95. மருந்து

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

aRRAl aLavaRin tuNka aஃtuTampupoRRAn neTituykkum ARu

H. Dheeptha

பொருள் / உரை

முருகா எளிய உரை

முன் உண்ட உணவு செரித்ததை அறிந்த பிறகு, உடலுக்குத் தேவையான அளவை அறிந்து அளவோடு உண்ண வேண்டும்; அவ்வாறு உண்பதே மானிட உடலைப் பெற்றவன் அதனை நெடுங்காலம் நோயின்றிப் பாதுகாக்கும் வழியாகும்.

• அற்றால் = முன் உண்ட உணவு செரித்த பின்பு,• அளவறிந்து உண்க = அடுத்த உணவைத் தன் செரிமான அளவுக்கு ஏற்ப அளவோடு உண்ண வேண்டும்;• அஃது = அப்படி உண்பதே,• உடம்பு பெற்றான் = அரிய மானிட உடம்பைப் பெற்றவன்,• நெடிது உய்க்கும் ஆறு = அதனைப் பிணியின்றி நெடுங்காலம் நல்வழியில் செலுத்தும் வழியாகும்.

மு.வரதராசன்

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

பரிமேலழகர்

அற்றால் அளவறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க; உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது - இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறற்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாலது ஈது ஒன்றுமேயாகலின், 'உடம்பு பெற்றான்' என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்துகொள்ளலாம் ஆகலின், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார். 'பெற்றால்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.

Meaning in English

Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout