நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.
nOynATi nOymutal nATi atutaNikkumvAynATi vAyppas seyal
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
நோயின் தன்மையை ஆராய்ந்து, அது வந்ததற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, அதனைப் போக்கும் சரியான மருத்துவ முறையை உணர்ந்து, நோயாளியின் உடலுக்குப் பொருந்துமாறு பிழையின்றி மருத்துவம் செய்ய வேண்டும்.
• நோய் நாடி = வந்துள்ள நோய் இன்னதென்று ஆராய்ந்து,• நோய்முதல் நாடி = அந்நோய் உண்டாவதற்கான மூல காரணத்தை அறிந்து,• அது தணிக்கும் வாய் நாடி = அதனைத் தீர்க்கும் சரியான மருத்துவ வழியை உணர்ந்து,• வாய்ப்பச் செயல் = பிழையின்றிப் பொருந்துமாறு மருத்துவம் செய்ய வேண்டும்.
மு.வரதராசன்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
பரிமேலழகர்
நோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய்' என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)
சாலமன் பாப்பையா
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
Meaning in English
Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill





