Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 947

பொருட்பால்அங்கவியல்95. மருந்து

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.

tIyaLa vanRit teriyAn perituNNinnOyaLa vinRip paTum

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் வயிற்றுப் பசித்தீயின் அளவையும் உணவின் தன்மையையும் ஆராயாமல் ஒருவன் அளவுக்கு அதிகமாக உண்டால், அவன் உடலில் நோய்கள் எல்லையின்றி வளர்ந்து துன்புறுத்தும்.

• தீயளவு அன்றி = தன் வயிற்றுப் பசித்தீயின் அளவை எண்ணாமல்,• தெரியான் = உணவின் தன்மையை ஆராயாமல்,• பெரிது உணின் = மிகுதியாக உண்டால்,• நோய் = நோய்கள்,• அளவின்றிப் படும் = எல்லை இல்லாமல் பெருகித் துன்பம் தரும்.

மு.வரதராசன்

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

பரிமேலழகர்

தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

Meaning in English

Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout