Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout