Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 215

அறத்துப்பால்இல்லறவியல்22. ஒப்புரவறிதல்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.

UruNi nIrniRain taRRE ulakavAmpEraRi vALan tiru

Sai Vignesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்று விரும்பும் பேரறிவாளனின் செல்வமானது, ஊர் மக்கள் அனைவருக்கும் குடிநீர் தரும் குளம் நிரம்பி வழிவது போல எல்லோருக்கும் பொதுவாய் பயன்படும்.

• உலகு அவாம் = உலக மக்கள் யாவரும் நலம் பெற வேண்டும் என விரும்பும்• பேரறிவாளன் திரு = சிறந்த அறிவாளியின் செல்வமானது,• ஊருணி = ஊர் மக்கள் நீர் அருந்தும் பொதுக்குளம்• நீர் நிறைந்தற்று = நல்ல நீரால் நிறைந்து அனைவருக்கும் பயன்படுவதைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

பரிமேலழகர்

உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

Meaning in English

The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout