Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 214

அறத்துப்பால்இல்லறவியல்22. ஒப்புரவறிதல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.

otta taRivAn uyirvAzhvAn maRRaiyAnsettAruL vaikkap paTum

Bhavana Isvi

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• ஒத்தது அறிவான் = உலகத்தாரோடு ஒத்துப்போய் உதவும் கடமையை அறிந்து வாழ்பவனே• உயிர் வாழ்வான் = உண்மையாக உயிரோடு வாழ்பவன் ஆவான்;• மற்றையான் = அவ்வாறு உதவாமல் வாழ்பவன்• செத்தாருள் வைக்கப்படும் = உடலால் வாழ்ந்தாலும் இறந்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.எளிய விளக்கம்:சமூகத்தோடு ஒத்துப்போய் பிறருக்கு உதவி வாழ்பவனே உண்மையாக உயிர் வாழ்பவன் ஆவான்; அவ்வாறு இல்லாதவன், உயிரோடு நடமாடினாலும் இறந்த பிணத்திற்கு ஒப்பாகவே கருதப்படுவான்.

மு.வரதராசன்

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

பரிமேலழகர்

உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.

Meaning in English

Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout