புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.
puttE Lulakattum INTum peRalaritEoppuravin nalla piRa
Abinaya Shenbagaraj
பொருள் / உரை
முருகா எளிய உரை
எல்லோரோடும் ஒத்துப்போய் பிறருக்கு உதவி வாழும் ஒப்புரவுப் பண்பைப் போலச் சிறந்த நற்செயல்களை, மேலுலகிலும் சரி இந்த பூவுலகிலும் சரி காண்பது மிகவும் அரிதாகும்.
• புத்தேள் உலகத்தும் = தேவர்கள் வாழும் மேலுலகத்திலும்• ஈண்டும் = நாம் வாழும் இந்த மண்ணுலகிலும்• ஒப்புரவின் = பிறருக்கு உதவும் ஒப்புரவுப் பண்பைப் போல• நல்ல பிற = சிறந்த வேறு நற்செயல்களைக்• பெறல் அரிதே = காண்பதும் பெறுவதும் மிக அரிதாகும்.
மு.வரதராசன்
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
பரிமேலழகர்
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
Meaning in English
To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below





