தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
tALARRit tanta poruLellAn takkArkkuvELANmai seytaR poruTTu
D. L. Murali
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் தன் சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் தேடிய செல்வம் முழுவதும், உதவி பெறத் தகுதியுடைய எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்கே ஆகும்.
• தாள் ஆற்றித் தந்த = கடும் முயற்சியால் உழைத்து ஈட்டிய• பொருள் எல்லாம் = செல்வங்கள் அனைத்தும்,• தக்கார்க்கு = உதவி தேவைப்படும் தகுதியான நல்லவர்களுக்கு• வேளாண்மை செய்தற் பொருட்டு = உதவி செய்து காப்பதற்கே பயன்பட வேண்டும்.
மு.வரதராசன்
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
பரிமேலழகர்
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
Meaning in English
The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours





