Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 218

அறத்துப்பால்இல்லறவியல்22. ஒப்புரவறிதல்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.

iTanil paruvattum oppuraviR kolkArkaTanaRi kATsi yavar

Akshaya Kannan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறருக்கு உதவி வாழும் கடமையை உணர்ந்த சான்றோர்கள், தம்மிடம் பொருள் வசதி இல்லாத வறுமைக் காலத்திலும் கூட, பிறருக்கு உதவும் செயல்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

• கடன் அறி காட்சியவர் = பிறருக்கு உதவ வேண்டிய கடமையை உணர்ந்த பேரறிவாளர்,• இடன் இல் பருவத்தும் = தமக்கு வசதி வாய்ப்பு இல்லாத வறுமைக் காலத்திலும் கூட,• ஒப்புரவிற்கு = பிறருக்கு உதவி செய்வதில்• ஒல்கார் = சற்றும் பின்வாங்காமல் தளராது நிற்பர்.

மு.வரதராசன்

ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

பரிமேலழகர்

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

Meaning in English

E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout