Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 219

அறத்துப்பால்இல்லறவியல்22. ஒப்புரவறிதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு.

nayanuTaiyAn nalkUrntA nAtal seyumnIraseyyA tamaikalA vARu

Divya Balasubramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறருக்கு உதவும் நல்ல நெஞ்சம் கொண்டவன் தான் ஏழையாகிவிட்டதாகக் கருதுவது, தன்னிடம் பணம் இல்லாததற்காக அல்ல; பிறருக்குச் செய்ய வேண்டிய உதவிகளைத் தன்னால் செய்ய முடியாமல் போகிறதே என்று வருந்தும் நிலையைத்தான்.

• நயன் உடையான் = பிறருக்கு உதவும் நற்பண்பாளன்• நல்கூர்ந்தான் ஆதல் = வறுமை அடைந்துவிட்டான் என்று சொல்லப்படுவது,• செயும் நீர = தான் பிறருக்குச் செய்ய வேண்டிய தகுதியான உதவிகளைச்• செய்யாது அமைகலா ஆறு = செய்ய முடியாமல் தவித்து வருந்தும் நிலையேயாகும்.

மு.வரதராசன்

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

பரிமேலழகர்

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

Meaning in English

The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout