Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 220

அறத்துப்பால்இல்லறவியல்22. ஒப்புரவறிதல்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.

oppuravi nAlvarung kETenin aஃtoruvanviRRukkOL takka tuTaittu

Monisha Soundararajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறருக்கு உதவி செய்வதன் காரணமாக ஒருவனுக்குப் பொருள் இழப்போ வறுமையோ வருமென்றால், அத்தகைய பெருமைமிக்க இழப்பை ஒருவன் தன்னையே விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடையதாகும்.

• ஒப்புரவினால் = பிறருக்கு உதவி வாழும் நற்செயலால்• கேடு வரும் எனின் = ஒருவனுக்குப் பொருள் இழப்பும் வறுமையும் வரும் என்றால்,• அஃது = அத்தகைய இழப்பானது• ஒருவன் விற்றுக் கோள் = ஒருவன் தன்னையே விற்றாவது வாங்கிக் கொள்ளும்• தக்கது உடைத்து = பெருமைக்கும் தகுதிக்கும் உரியதாகும்.

மு.வரதராசன்

ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

பரிமேலழகர்

ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

Meaning in English

Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout