Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 945

பொருட்பால்அங்கவியல்95. மருந்து

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

mARupA TillAta uNTi maRuttuNNinURupA Tillai uyirkku

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

உடலுக்கு மாறுபாடில்லாத நல்ல உணவையே உண்டாலும், அளவுக்கு மீறாமல் சற்று குறைத்து அளவோடு உண்டால், உடம்பில் வாழும் உயிர்க்கு நோயினால் வரும் துன்பம் எதுவும் உண்டாகாது.

• மாறுபாடு இல்லாத உண்டி = உடலுக்கு ஒவ்வாமை இல்லாத நல்ல உணவையும்,• மறுத்து உணின் = வயிறு புடைக்க உண்ணாமல் சிறிதளவு குறைத்து உண்டால்,• உயிர்க்கு = உடம்பில் உள்ள உயிர்க்கு,• ஊறுபாடு இல்லை = நோயினால் வரும் எந்தத் துன்பமும் இல்லை.

மு.வரதராசன்

மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

பரிமேலழகர்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

Meaning in English

With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout