நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாகநவாக்கிரி யெண்பத் தொருவகை யாகநவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.
பாடல் 1319 — உரைVerse 1319 — meaning
ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால், அது ஒரே சக்தியாக இருக்கும் இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கும் சக்கரமாகும். இந்தச் சக்கரத்தில் இருக்கும் ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால், மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்திருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும்போது ஓர் எழுத்தில் ஆரம்பித்து மற்றோர் எழுத்தில் முடிவதாக இருக்கும். அதைத் தலைகீழாகப் பார்க்கும்போது, முடிவான எழுத்தில் ஆரம்பித்து ஆரம்ப எழுத்தில் முடிவதாகவும் இருக்கும்.
If I explain to you the Navakkiri Chakra, made of the letters that are the very form of the nine powers, it is a chakra where the one letter that stands as the form of the one and only Goddess turns into nine letters. If the nine letters found in this chakra are written cycling through nine cells, they extend in all to eighty-one cells. When these nine letters, the very form of the nine powers, are read in the forward direction, they begin with one letter and end with another; and when read in reverse, they begin with that ending letter and end with the beginning one.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால்,
If I explain to you the Navakkiri Chakra, made of the letters that are the very form of the nine powers,
- வரி 2Line 2
அது ஒரே சக்தியாக இருக்கும் இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கும் சக்கரமாகும்.
it is a chakra where the one letter that stands as the form of the one and only Goddess turns into nine letters.
- வரி 3Line 3
இந்தச் சக்கரத்தில் இருக்கும் ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால், மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்திருக்கும்.
If the nine letters found in this chakra are written cycling through nine cells, they extend in all to eighty-one cells.
- வரி 4Line 4
இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும்போது ஓர் எழுத்தில் ஆரம்பித்து மற்றோர் எழுத்தில் முடியும்; தலைகீழாகப் பார்க்கும்போது முடிவான எழுத்தில் ஆரம்பித்து ஆரம்ப எழுத்தில் முடியும்.
When these nine letters are read in the forward direction, they begin with one letter and end with another; and when read in reverse, they begin with that ending letter and end with the beginning one.




