தொடர்ந்து படிக்கread this section continuously
சூலந்தண் டொள்வாள் சுடர்பரை ஞானமாய்வேலம்பு தமாக மாகிளி விற்கொண்டுகோலம்பு பாசம் மழுக்கத்தி கைக்கொண்டுகோலஞ்சேர் சங்கு குவிந்தகை யெண்ணதே.
உரைmeaning
பாடல் #1397 இல் உள்ளபடி, தனது திருக்கரங்களைச் சாதகருக்குள் கொடுத்து, சாதகருக்கும் உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும்படிப் பரந்து விரிந்து சாதகரைச் சுற்றி அருளுகின்ற இறைவி, தனது இருபது திருக்கரங்களிலும் பலவிதமான ஆயுதங்களையும், அபயம் காட்டும் திருக்கரங்களையும், முக்தியையும் சரணாகதியையும் குறிக்கும் திருக்கரங்களையும் கொண்டு, தம்மைச் சுற்றிப் பாதுகாப்பாக நிற்கிறாள் என்று பாடல் கூறுகிறது. இப்படி இருபது கரங்களில் இருபது வகைகளில் தம்மைச் சுற்றிப் பாதுகாப்பாக நிற்கும் இறைவியைச் சாதகர் எண்ணித் தியானித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1397 says, the Goddess, who gives her sacred arms to the practitioner and, spreading out wide around him, graciously surrounds him so as to cut the bond between him and his feelings, stands protectively around herself with various weapons, hands showing refuge, and hands signifying liberation and surrender, held in her twenty sacred arms, the verse declares. The practitioner must hold this Goddess, who stands thus protectively around herself in twenty ways in her twenty arms, continually in thought and meditation, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1397 இல் உள்ளபடி, தனது திருக்கரங்களைச் சாதகருக்குள் கொடுத்து, சாதகருக்கும் உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும்படிப் பரந்து விரிந்து சாதகரைச் சுற்றி அருளுகின்ற இறைவி,
As verse 1397 says, the Goddess, who gives her sacred arms to the practitioner and, spreading out wide around him, graciously surrounds him so as to cut the bond between him and his feelings,
- வரி 2Line 2
தனது இருபது திருக்கரங்களிலும் பலவிதமான ஆயுதங்களையும், அபயம் காட்டும் திருக்கரங்களையும் கொண்டு இருக்கிறாள்.
holds various weapons and hands showing refuge in her twenty sacred arms.
- வரி 3Line 3
முக்தியையும் சரணாகதியையும் குறிக்கும் திருக்கரங்களையும் கொண்டு, தம்மைச் சுற்றிப் பாதுகாப்பாக நிற்கிறாள்.
She also holds hands signifying liberation and surrender, and stands protectively around herself.
- வரி 4Line 4
இப்படி இருபது கரங்களில் இருபது வகைகளில் தம்மைச் சுற்றிப் பாதுகாப்பாக நிற்கும் இறைவியைச் சாதகர் எண்ணித் தியானித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
The practitioner must hold this Goddess, who stands thus protectively around herself in twenty ways in her twenty arms, continually in thought and meditation.
திருமந்திரம் பாடல் #1398





