தொடர்ந்து படிக்கread this section continuously
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துளதாபத்துச் சத்தி தயங்கி வருதலாலாபத்துக் கைகள டைந்தன நாலைந்துபாசம றுக்கப் பரந்தன சூழவே.
உரைmeaning
பாடல் #1396 இல் உள்ளபடி, சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில் வீற்றிருக்கும் இறைவிக்குக் குளிர்ச்சியான அருளை வழங்கும் திருமுகங்கள் பத்து விதமாக இருக்கிறது என்று பாடல் கூறுகிறது. சாதகருக்குள்ளிருந்து எழுந்துவருகின்ற உணர்வுகளால் மனம் சஞ்சலம் அடையாதபடி, அந்தப் பத்துத் திருமுகங்களின் அருளால் இறைவியானவள் வேகத்தைத் தடுத்துக் குறைத்துத் தயங்கி வரும்படி அருளுகிறாள். அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளிலிருந்து சாதகரைக் காப்பாற்றி அருளுவதற்குப் பலவிதமான ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருக்கும் தனது இருபது திருக்கரங்களைச் சாதகருக்குள் கொடுத்து, சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும்படிப் பரந்து விரிந்து சாதகரைச் சுற்றி அருளுகிறாள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1396 says, the Goddess who dwells in the subtle well between the practitioner's navel and heart has ten sacred faces that grant cooling grace, the verse declares. So that the mind is not disturbed by the feelings that rise up from within the practitioner, by the grace of these ten sacred faces she graciously restrains and lessens their force, making them approach hesitantly. To save and protect the practitioner from the dangers that come from those feelings, she gives the practitioner her twenty sacred arms, which bear various weapons, and, spreading out wide around the practitioner, graciously surrounds him so as to cut the bond between him and those feelings, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1396 இல் உள்ளபடி, சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில் வீற்றிருக்கும் இறைவிக்குக் குளிர்ச்சியான அருளை வழங்கும் திருமுகங்கள் பத்து விதமாக இருக்கிறது.
As verse 1396 says, the Goddess who dwells in the subtle well between the practitioner's navel and heart has ten sacred faces that grant cooling grace.
- வரி 2Line 2
சாதகருக்குள்ளிருந்து எழுந்துவருகின்ற உணர்வுகளால் மனம் சஞ்சலம் அடையாதபடி, அந்தப் பத்துத் திருமுகங்களின் அருளால் இறைவியானவள் வேகத்தைத் தடுத்துக் குறைத்துத் தயங்கி வரும்படி அருளுகிறாள்.
So that the mind is not disturbed by the feelings that rise up from within the practitioner, by the grace of these ten sacred faces she graciously restrains and lessens their force, making them approach hesitantly.
- வரி 3Line 3
அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளிலிருந்து சாதகரைக் காப்பாற்றி அருளுவதற்குப் பலவிதமான ஆயுதங்களை ஏந்திக்கொண்டிருக்கும் தனது இருபது திருக்கரங்களைச் சாதகருக்குள் கொடுக்கிறாள்.
To save and protect the practitioner from the dangers that come from those feelings, she gives the practitioner her twenty sacred arms, which bear various weapons.
- வரி 4Line 4
சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும்படிப் பரந்து விரிந்து சாதகரைச் சுற்றி அருளுகிறாள்.
Spreading out wide around the practitioner, she graciously surrounds him so as to cut the bond between him and those feelings.
திருமந்திரம் பாடல் #1397





