திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1396

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விண்ணமர் நாபி யிரதயமாங் கிடைக்கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.

உரை

பாடல் #1395 இல் உள்ளபடி, ஆகாயத்தில் பரந்து விரிந்திருக்கும் ஜோதியானது, சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையில் அமர்ந்திருக்கின்ற கிணறோடு கலந்து ஒன்றாகி வரும்போது, பாடல் #1395 இல் உள்ளபடி சாதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும் பீஜ மந்திரங்களில் வீற்றிருந்து, அந்த இடமே சூரிய மண்டலமாக ஆகிவிடும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, ஜோதியின் அருள் நிரம்புகின்ற அந்தச் சூட்சுமத் துளையான கிணற்றில், அருள் முழுவதும் செழுமை பெற்றிருப்பதைக் காணலாம் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1395 இல் உள்ளபடி, ஆகாயத்தில் பரந்து விரிந்திருக்கும் ஜோதியானது, சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையில் அமர்ந்திருக்கின்ற கிணறோடு கலந்து ஒன்றாகிவரும்.

  • வரி 2

    அப்போது அது சாதகர் ஜெபித்துக்கொண்டிருக்கும் பீஜ மந்திரங்களில் வீற்றிருக்கும்.

  • வரி 3

    அந்த இடமே சூரிய மண்டலமாக ஆகிவிடும்.

  • வரி 4

    அதன்பிறகு, ஜோதியின் அருள் நிரம்புகின்ற அந்தச் சூட்சுமத் துளையான கிணற்றில், அருள் முழுவதும் செழுமை பெற்றிருப்பதைக் காணலாம்.

திருமந்திரம் பாடல் #1396

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout