தொடர்ந்து படிக்கread this section continuously
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்காலது வாகக் கலந்துகௌம் னைம்என்றுமாலது வாக வழிபாடு செய்துநீபாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
உரைmeaning
பாடல் #1394 இல் உள்ளபடி, சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளுக்கு உள்ளேயே பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும் ஜோதியை, 'கௌம்' மற்றும் 'ஐம்' எனும் பீஜ மந்திரங்களை ஜெபித்துக்கொண்டு, காக்கின்ற தெய்வமாக அந்த ஜோதியை எண்ணித் தியானம் செய்தால், பாலைப்போலப் பரந்தெழுந்து, சாதகர்களின் உடல் முழுவதும் பரந்திருக்கும் அந்த ஜோதி சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து ஆகாயத்திலும் பரந்து விரிந்துகொண்டே இருக்கும் என்று பாடல் கூறுகிறது.
As verse 1394 says, if one meditates upon the flame that lies dim and unblazing within the sacred feet of the Goddess who dwells within the practitioner, reciting the seed mantras 'Kaum' and 'Aim' and holding that flame in thought as the protecting deity, the flame, spread throughout the practitioner's body, rises up like milk spreading out from within his body and continues spreading out into the sky, the verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1394 இல் உள்ளபடி, சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளுக்கு உள்ளேயே பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும் ஜோதியை,
As verse 1394 says, the flame that lies dim and unblazing within the sacred feet of the Goddess who dwells within the practitioner,
- வரி 2Line 2
'கௌம்' மற்றும் 'ஐம்' எனும் பீஜ மந்திரங்களை ஜெபித்துக்கொண்டு காக்கின்ற தெய்வமாக அந்த ஜோதியை எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.
reciting the seed mantras 'Kaum' and 'Aim' and holding that flame in thought as the protecting deity, one should meditate.
- வரி 3Line 3
பாலைப்போலப் பரந்தெழுந்து, சாதகர்களின் உடல் முழுவதும் பரந்திருக்கும் அந்த ஜோதி சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வரும்.
The flame, spread throughout the practitioner's body, rises up like milk spreading out from within his body.
- வரி 4Line 4
அது ஆகாயத்திலும் பரந்து விரிந்துகொண்டே இருக்கும்.
It continues spreading out into the sky.
திருமந்திரம் பாடல் #1395





