திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1394

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பச்சை யிவளுக்குப் பாங்கிமா ராறெட்டுக்கொச்சைய ரெண்மர்கள் கூடி வருதலாற்கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்எச்ச விடைச்சி யினிதிருந் தாளே.

உரை

பாடல் #1393 இல் உள்ளபடி, சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கும் இறைவிக்குச் சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள் நாற்பத்தெட்டுப் பேர் இருக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. அவளுக்குச் சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற எட்டுப் பேரும் அந்த நாற்பத்தெட்டு பேரோடு சேர்ந்து மொத்தம் ஐம்பத்தாறு பேராக அவளை எப்போதும் சூழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் திருமார்புகளில் மார்புக் கச்சைகளை அணிந்துகொண்டும், தங்களின் திருக்கரங்கள் இரண்டிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டும், காக்கின்ற வளையமாகச் சூழ்ந்திருக்க, மெல்லிய இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில் இனிமையாக வீற்றிருந்தாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1393 இல் உள்ளபடி, சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கும் இறைவிக்குச் சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள் நாற்பத்தெட்டுப் பேர் இருக்கிறார்கள்.

  • வரி 2

    அவளுக்குச் சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற எட்டுப் பேரும் அந்த நாற்பத்தெட்டு பேரோடு சேர்ந்து மொத்தம் ஐம்பத்தாறு பேராக அவளை எப்போதும் சூழ்ந்து வருகிறார்கள்.

  • வரி 3

    அவர்கள் அனைவரும் தங்களின் திருமார்புகளில் மார்புக் கச்சைகளை அணிந்துகொண்டும், தங்களின் திருக்கரங்கள் இரண்டிலும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டும் காக்கின்ற வளையமாகச் சூழ்ந்திருக்கிறார்கள்.

  • வரி 4

    மெல்லிய இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில் இனிமையாக வீற்றிருந்தாள்.

திருமந்திரம் பாடல் #1394

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout