திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1393

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உகந்தனள் பொன் முடிமுத் தாரமாகப்பரந்த பவளமும் பட்டாடை சாத்திமலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்துதழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

உரை

பாடல் #1392 இல் உள்ளபடி, சாதகருக்குள் விருப்பமுடன் வீற்றிருக்கும் இறைவி, தங்க நிறத்தில் சூரியக் கதிர்களைப் போல ஒளி வீசுகின்ற தலைமுடியிலிருந்து அடிவரை நிறைந்தும் முத்துக்களும் பவளங்களும் பதித்துப் பரந்து விரிந்திருக்கும் மாலையையும், மிக உன்னதமான பட்டால் ஆகிய ஆடையையும் சாத்திக்கொண்டு இருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. அவளுடைய மலர்போல மலர்ந்தெழுந்திருக்கும் திருமார்பகங்களின்மேல், நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மார்புக் கச்சையை அணிந்துகொண்டு இருக்கிறாள். இவ்வாறெல்லாம் அலங்கரித்துக்கொண்டு, பேரழகோடு சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியே பசுமையாக இருக்கிறாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1392 இல் உள்ளபடி, சாதகருக்குள் விருப்பமுடன் வீற்றிருக்கும் இறைவி, தங்க நிறத்தில் சூரியக் கதிர்களைப் போல ஒளி வீசுகின்ற தலைமுடியை உடையவள்.

  • வரி 2

    அடிவரை நிறைந்தும் முத்துக்களும் பவளங்களும் பதித்துப் பரந்து விரிந்திருக்கும் மாலையையும், மிக உன்னதமான பட்டால் ஆகிய ஆடையையும் சாத்திக்கொண்டு இருக்கிறாள்.

  • வரி 3

    அவளுடைய மலர்போல மலர்ந்தெழுந்திருக்கும் திருமார்பகங்களின்மேல், நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மார்புக் கச்சையை அணிந்துகொண்டு இருக்கிறாள்.

  • வரி 4

    இவ்வாறெல்லாம் அலங்கரித்துக்கொண்டு, பேரழகோடு சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியே பசுமையாக இருக்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1393

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout