திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1392

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தவிச் சத்தி யிருநாலு கையிற்பரந்தவிப் பூக்கிளி பாச மழுவாழ்கரந்த கடகுடன் வில்லம்பு கொண்டங்குரந்தங் கிருந்தவன் கூத்துகந் தாளே.

உரை

பாடல் #1391 இல் உள்ளபடி, சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த இந்த இறைவி, தனது எட்டுத் திருக்கரங்களிலும் பரந்து விரிந்திருக்கும் தாமரையையும், ஆன்மாவாகிய கிளியையும், பாசமாகிய கயிற்றையும், அந்தப் பாசத்தை அறுக்கின்ற மழுவையும், உலகப் பற்றுகளாகிய பகைகளை அழிக்கின்ற வாளையும், காக்கின்ற கேடயத்தையும், இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும், அம்பையும் ஏந்திக்கொண்டு, சாதகருக்குள் முழுவதும் பரவி அவருக்குள்ளேயே வீற்றிருந்து, சாதகரின் அனைத்துக் கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை விருப்பமுடன் ஆடுகிறாள் என்று பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1391 இல் உள்ளபடி, சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த இந்த இறைவி, தனது எட்டுத் திருக்கரங்களிலும்,

  • வரி 2

    பரந்து விரிந்திருக்கும் தாமரையையும், ஆன்மாவாகிய கிளியையும், பாசமாகிய கயிற்றையும், அந்தப் பாசத்தை அறுக்கின்ற மழுவையும் ஏந்தியிருக்கிறாள்.

  • வரி 3

    உலகப் பற்றுகளாகிய பகைகளை அழிக்கின்ற வாளையும், காக்கின்ற கேடயத்தையும், இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும் அம்பையும் ஏந்திக்கொண்டு,

  • வரி 4

    சாதகருக்குள் முழுவதும் பரவி அவருக்குள்ளேயே வீற்றிருந்து, சாதகரின் அனைத்துக் கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை விருப்பமுடன் ஆடுகிறாள்.

திருமந்திரம் பாடல் #1392

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout