திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1391

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்டவிச் சத்தி யிருதய பங்கயங்கொண்டவித் தத்துவ நாயகி யானவள்பண்டையவ் வாயுப் பகையை யறுத்திடவின்றென் மனத்து ளினிதிருந் தாளே.

உரை

பாடல் #1390 இல் உள்ளபடி, சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவி, சாதகரின் இதயத் தாமரையைத் தனது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருப்பாள் என்று பாடல் கூறுகிறது. அப்படி அவள் வீற்றிருக்கும் முறைக்கு வேண்டிய அனைத்துத் தத்துவங்களுக்கும் அவளே தலைவியாக ஆகிறாள். அவளை எண்ணிக்கொண்டே இருந்து, ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற மனமாகிய எண்ணங்களைச் சாதகர் தம்மிடமிருந்து முழுவதுமாக நீக்கிவிட்டால், அது முழுவதுமாக நீங்கிய அன்றே, சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இறைவியானவள் இன்பமுடன் வீற்றிருப்பாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1390 இல் உள்ளபடி, சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவி, சாதகரின் இதயத் தாமரையைத் தனது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருப்பாள்.

  • வரி 2

    அப்படி அவள் வீற்றிருக்கும் முறைக்கு வேண்டிய அனைத்துத் தத்துவங்களுக்கும் அவளே தலைவியாக ஆகிறாள்.

  • வரி 3

    அவளை எண்ணிக்கொண்டே இருந்து, ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற மனமாகிய எண்ணங்களைச் சாதகர் தம்மிடமிருந்து முழுவதுமாக நீக்கிவிட வேண்டும்.

  • வரி 4

    அது முழுவதுமாக நீங்கிய அன்றே, சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இறைவியானவள் இன்பமுடன் வீற்றிருப்பாள்.

திருமந்திரம் பாடல் #1391

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout