தொடர்ந்து படிக்கread this section continuously
நின்ற விச்சத்தி நிலைபெற நின்றிடிற்கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்கொண்ட விரதநீர் குன்றாம னின்றிடின்மன்றினி லாடு மணியது காணுமே.
உரைmeaning
பாடல் #1389 இல் உள்ளபடி, ஐம்பத்திருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற இந்த இறைவி, சாதகருக்குள் நிலையாக உறுதியுடன் நின்றுவிட்டால், சாதகர் தமக்குள் தரிசித்த இந்த அக்னி வடிவான இறைவியோடு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்துவிடும் என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகும், தாம் எடுத்துக்கொண்ட நவாக்கிரி சக்கர சாதகத்தைச் சாதகர் ஒரு குறையும் இல்லாமல் தொடர்ந்து செய்துவந்தால், அவருக்குள் இருக்கும் அம்பலத்தில் ஒன்றாக ஆடுகின்ற, பாடல் #383 இல் உள்ளபடி வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும் தரிசிக்கலாம் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1389 says, if this Goddess, who stands as the fifty-two made one, remains steadfastly established within the practitioner, then the Nine-Letter Chakra within him unites with this fire-formed Goddess whom he has beheld within himself, the verse declares. After that, if the practitioner continues, without a single lapse, the Nine-Letter Chakra sadhana he has undertaken, he may behold, as in verse #383, the Lord who is the diamond stone dancing together in the hall within him, and the power that is its light, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1389 இல் உள்ளபடி, ஐம்பத்திருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற இந்த இறைவி சாதகருக்குள் நிலையாக உறுதியுடன் நின்றுவிட்டால்,
As verse 1389 says, if this Goddess, who stands as the fifty-two made one, remains steadfastly established within the practitioner,
- வரி 2Line 2
சாதகர் தமக்குள் தரிசித்த இந்த அக்னி வடிவான இறைவியோடு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்துவிடும்.
the Nine-Letter Chakra within him unites with this fire-formed Goddess whom he has beheld within himself.
- வரி 3Line 3
அதன்பிறகும், தாம் எடுத்துக்கொண்ட நவாக்கிரி சக்கர சாதகத்தைச் சாதகர் ஒரு குறையும் இல்லாமல் தொடர்ந்து செய்துவந்தால்,
After that, if the practitioner continues, without a single lapse, the Nine-Letter Chakra sadhana he has undertaken,
- வரி 4Line 4
அவருக்குள் இருக்கும் அம்பலத்தில் ஒன்றாக ஆடுகின்ற, பாடல் #383 இல் உள்ளபடி வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும் தரிசிக்கலாம்.
he may behold, as in verse #383, the Lord who is the diamond stone dancing together in the hall within him, and the power that is its light.
திருமந்திரம் பாடல் #1390





