திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1389

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்காரணி கன்னிக ளைம்பத் திருவராய்க்காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்காரணி தன்னரு ளாகிநின் றாளே.

உரை

பாடல் #1388 இல் உள்ளபடி, சாதகர் தமது மும்மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்குக் காரணமாக இருக்கின்ற சக்திகள், மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாகப் பிரிந்து இருக்கின்றனர் என்று பாடல் கூறுகிறது. இந்தச் சக்திகள் என்றும் இளமையுடன், சிறிதும் அருளில் குறைவின்றி, ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளேயே நின்று, சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும், இனி வரும் பிறவிகளுக்குக் காரணமாக இருக்கின்ற கர்மங்களையும் முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்துவிடுகின்றனர். சாதகர் இறைவனை அடைவதற்குக் காரணமாக இருக்கின்ற இறைவியே, தனது பேரருளால் இந்த ஐம்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக ஆகி நிற்கிறாள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1388 இல் உள்ளபடி, சாதகர் தமது மும்மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்குக் காரணமாக இருக்கின்ற சக்திகள் மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாகப் பிரிந்து இருக்கின்றனர்.

  • வரி 2

    இந்தச் சக்திகள் என்றும் இளமையுடன், சிறிதும் அருளில் குறைவின்றி, ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர்.

  • வரி 3

    இவர்கள் அனைவரும் நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளேயே நின்று, சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்குக் காரணமாக இருக்கின்ற கர்மங்களையும் முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்துவிடுகின்றனர்.

  • வரி 4

    சாதகர் இறைவனை அடைவதற்குக் காரணமாக இருக்கின்ற இறைவியே, தனது பேரருளால் இந்த ஐம்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக ஆகி நிற்கிறாள்.

திருமந்திரம் பாடல் #1389

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout