தொடர்ந்து படிக்கread this section continuously
எண்ணமர் சத்திகள் நாற்பத்தி னாலுடனெண்ணமர் சத்திகள் நாற்பத்தி னால்வராமெண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவளெண்ணிய வெண்ணங் கடந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1398 இல் உள்ளபடி, தன்னைச் சுற்றிப் பாதுகாப்பாக இருக்கின்ற இறைவியையே எண்ணித் தியானத்தில் இருக்கின்ற சாதகரின் எண்ணத்தில் அமர்ந்திருக்கின்ற சக்திகள் மொத்தம் நாற்பத்து நான்கு பேர்களாக இருக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. இந்த நாற்பத்து நான்கு பேரும் சாதகரின் கழுத்திலிருந்து அடிவயிறு வரை இருக்கும் சக்கரங்களில் மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு உள்ளே இருக்கிறார்கள். இந்த நாற்பத்து நான்கு பேர்களின் சக்திகளாகவும் இறைவியே இருக்கிறாள். சாதகரும் இந்த நாற்பத்து நான்கு சக்திகளும் எண்ணிக்கொண்டிருக்கும் தியானத்தின் எண்ணங்கள் அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக இறைவி நிற்கிறாள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1398 says, the powers that sit within the thought of the practitioner who meditates upon the Goddess who protectively surrounds herself number forty-four in all, the verse declares. All forty-four of them dwell within a total of forty-four petals belonging to the chakras that lie between the practitioner's neck and lower abdomen. The Goddess herself is also the power of these forty-four. The Goddess stands as the mighty power that surpasses every thought held in the meditation of the practitioner and these forty-four powers, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1398 இல் உள்ளபடி, தன்னைச் சுற்றிப் பாதுகாப்பாக இருக்கின்ற இறைவியையே எண்ணித் தியானத்தில் இருக்கின்ற சாதகரின் எண்ணத்தில் அமர்ந்திருக்கின்ற சக்திகள் மொத்தம் நாற்பத்து நான்கு பேர்களாக இருக்கிறார்கள்.
As verse 1398 says, the powers that sit within the thought of the practitioner who meditates upon the Goddess who protectively surrounds herself number forty-four in all.
- வரி 2Line 2
இந்த நாற்பத்து நான்கு பேரும் சாதகரின் கழுத்திலிருந்து அடிவயிறு வரை இருக்கும் சக்கரங்களில் மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு உள்ளே இருக்கிறார்கள்.
All forty-four of them dwell within a total of forty-four petals belonging to the chakras that lie between the practitioner's neck and lower abdomen.
- வரி 3Line 3
இந்த நாற்பத்து நான்கு பேர்களின் சக்திகளாகவும் இறைவியே இருக்கிறாள்.
The Goddess herself is also the power of these forty-four.
- வரி 4Line 4
சாதகரும் இந்த நாற்பத்து நான்கு சக்திகளும் எண்ணிக்கொண்டிருக்கும் தியானத்தின் எண்ணங்கள் அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக இறைவி நிற்கிறாள்.
The Goddess stands as the mighty power that surpasses every thought held in the meditation of the practitioner and these forty-four powers.
திருமந்திரம் பாடல் #1399





