தொடர்ந்து படிக்கread this section continuously
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடுதொடர்ந்தணி முத்துப் பவளங் கச்சாகப்படர்ந்தல் குற்பட்டாடை பாதச் சிலம்புமடந்தை குமிறீயில் வந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1399 இல் உள்ளபடி, அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியான இறைவி, தங்கத்தாலான கிரீடத்தைத் தனது திருமுடியிலும், மாணிக்கத்தாலான தோடுகளைத் தனது திருக்காதுகளிலும், முத்துக்களாலான ஆரத்தைத் தனது திருக்கழுத்திலும், பவளங்களால் பதிக்கப்பட்ட கச்சையைத் தனது திருமார்பிலும், தனது திருஇடையைத் தாண்டி படர்ந்திருக்கும் கீழ்ப் பகுதியில் பட்டாலான ஆடையையும், தனது திருவடிகளில் சிலம்புகளையும் அணிந்துகொண்டு, சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற 'ஹ்ரீம்' எனும் பீஜ மந்திரத்தில் வந்து வீற்றிருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது.
As verse 1399 says, the Goddess, the mighty power beyond all else, wears a crown of gold upon her sacred crown of hair, ruby earrings upon her sacred ears, a pearl chain upon her sacred neck, a band studded with corals upon her sacred breast, a garment of silk spreading below her sacred waist, and anklets upon her sacred feet, and comes to dwell in the seed mantra 'Hreem', which stands at the starting point of the Nine-Letter Chakra within the practitioner, the verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1399 இல் உள்ளபடி, அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியான இறைவி, தங்கத்தாலான கிரீடத்தைத் தனது திருமுடியிலும், மாணிக்கத்தாலான தோடுகளைத் தனது திருக்காதுகளிலும் அணிந்துகொண்டு இருக்கிறாள்.
As verse 1399 says, the Goddess, the mighty power beyond all else, wears a crown of gold upon her sacred crown of hair and ruby earrings upon her sacred ears.
- வரி 2Line 2
முத்துக்களாலான ஆரத்தைத் தனது திருக்கழுத்திலும், பவளங்களால் பதிக்கப்பட்ட கச்சையைத் தனது திருமார்பிலும் அணிந்துகொண்டு இருக்கிறாள்.
She wears a pearl chain upon her sacred neck and a band studded with corals upon her sacred breast.
- வரி 3Line 3
தனது திருஇடையைத் தாண்டி படர்ந்திருக்கும் கீழ்ப் பகுதியில் பட்டாலான ஆடையையும், தனது திருவடிகளில் சிலம்புகளையும் அணிந்துகொண்டு இருக்கிறாள்.
She wears a garment of silk spreading below her sacred waist and anklets upon her sacred feet.
- வரி 4Line 4
சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் ஆரம்ப நிலையில் இருக்கின்ற 'ஹ்ரீம்' எனும் பீஜ மந்திரத்தில் வந்து வீற்றிருக்கிறாள்.
She comes to dwell in the seed mantra 'Hreem', which stands at the starting point of the Nine-Letter Chakra within the practitioner.
திருமந்திரம் பாடல் #1400





