திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1401

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றவள் சத்தி நிறந்தரம் மாகவேகண்டிடு மேரு வணுவாதி தானாதிப்பண்டைய வாநின் பகட்டை யறுத்திடவொன்றிய தீபமுணர்ந் தாற்குண் டாகுமே.

உரை

பாடல் #1400 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற இறைவி, பராசக்தியாகச் சாதகருக்குள் முழுவதும் நிறைந்து, மிகவும் உயர்ந்த நிலையில் தமக்குள் செயல்படுவதைச் சாதகர் தரிசித்துத் தமக்குள் அவளை வைத்து வணங்கும்போது, சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு அவள் செயல்படுகிறாள் என்று பாடல் கூறுகிறது. இப்படிச் சாதகருக்குள் செயல்படுகின்ற பராசக்தியான இறைவியே அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் ஆதியாகவும், அவருக்கு வெளியில் அண்டசராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் ஆதியாகவும் இருக்கிறாள். அப்போது, பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஜோதி வடிவமாகிய தனது ஆன்மாவும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதைத் தமக்குள் உணர்ந்துகொண்ட சாதகர்களுக்கு, அசையாச் சக்தியாகிய பரம்பொருளிலிருந்து முதன்முதலில் ஆசையினால் பிரிந்துவந்த சாதகரின் ஆன்மாவுக்கு உள்ளே இறைவனை விட்டுப் பிரிவதற்கு முழுமுதல் காரணமாகவும் ஆணிவேராகவும் இருக்கின்ற ஆசையை முழுவதுமாக அறுத்து, மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்கி அருளுகிறாள் இறைவி என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1400 இல் உள்ளபடி, சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற இறைவி, பராசக்தியாகச் சாதகருக்குள் முழுவதும் நிறைந்து, மிகவும் உயர்ந்த நிலையில் தமக்குள் செயல்படுவதைச் சாதகர் தரிசித்து வணங்கும்போது,

  • வரி 2

    சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு அவள் செயல்படுகிறாள்.

  • வரி 3

    இப்படிச் செயல்படுகின்ற பராசக்தியான இறைவியே, சாதகருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் ஆதியாகவும், அவருக்கு வெளியில் அண்டசராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் ஆதியாகவும் இருக்கிறாள்.

  • வரி 4

    தமது ஆன்மா இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருப்பதை உணர்ந்துகொண்ட சாதகர்களுக்கு, இறைவனை விட்டுப் பிரிவதற்குக் காரணமான ஆசையை அறுத்து, மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்கி அருளுகிறாள் இறைவி.

திருமந்திரம் பாடல் #1401

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout