திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1402

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்டாம தோமுக முத்தம மானதுகண்டவிச் சத்தி சதாசிவ நாயகிகொண்ட முகமைந்து கூறுங் கரங்களுமொன் றிரண்டாகவே மூன்றுநா லானதே.

உரை

பாடல் #1401 இல் உள்ளபடி, இறைவியின் பேரொளியோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள், இறைவியின் அருளால் உருவாகும் சக்தியின் அம்சமே இறைவனின் ஆறாவது முகமான அதோமுகமாக, எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை நிலை ஆகிறது என்று பாடல் கூறுகிறது. சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியே, அசையாச் சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள். அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்குச் சரிசமமாகுவதற்கு, ஐந்து முகங்களாகவும் அதனோடு சேர்ந்து இயங்குகின்ற பத்துக் கரங்களாகவும் ஆகிறார் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1401 இல் உள்ளபடி, இறைவியின் பேரொளியோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள், இறைவியின் அருளால் உருவாகும் சக்தியின் அம்சமே இறைவனின் ஆறாவது முகமான அதோமுகமாக ஆகிறது.

  • வரி 2

    இது எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை நிலை ஆகும்.

  • வரி 3

    சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியே, அசையாச் சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள்.

  • வரி 4

    அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்குச் சரிசமமாகுவதற்கு, ஐந்து முகங்களாகவும் அதனோடு சேர்ந்து இயங்குகின்ற பத்துக் கரங்களாகவும் ஆகிறார்.

திருமந்திரம் பாடல் #1402

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout