திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1403

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்பன்மணி நாகமழுக் கத்தி பந்தாகுங்கன்மணி தாமரை கையிற் றமருகம்பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

உரை

பாடல் #1402 இல் உள்ளபடி, நன்மையை அருளும் இறைவியின் பத்துத் திருக்கரங்களில், தூய்மையான ரத்தின மணிகளைப் பதித்த திரிசூலமும் மண்டையோடும் கிளியும், பலவிதமான ரத்தின மணிகளைப் பதித்த நாகமும் கோடரியும் கத்தியும், பந்தும் ஆயுதமாகவும், கல்லில் ரத்தின மணிகளைப் பதித்த தாமரை மலரும் தமருகமும், தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்திருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் இந்தப் பத்துப் பொருட்களுமே இறைவிக்குச் சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1402 இல் உள்ளபடி, நன்மையை அருளும் இறைவியின் பத்துத் திருக்கரங்களில், தூய்மையான ரத்தின மணிகளைப் பதித்த திரிசூலமும் மண்டையோடும் கிளியும் இருக்கிறது.

  • வரி 2

    பலவிதமான ரத்தின மணிகளைப் பதித்த நாகமும் கோடரியும் கத்தியும், பந்தும் ஆயுதமாக இருக்கிறது.

  • வரி 3

    கல்லில் ரத்தின மணிகளைப் பதித்த தாமரை மலரும் தமருகமும், தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்திருக்கிறாள்.

  • வரி 4

    இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் இந்தப் பத்துப் பொருட்களுமே இறைவிக்குச் சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும்.

திருமந்திரம் பாடல் #1403

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout