திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1404

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பூசனை சத்திக ளெண்ணைவர் சூழவேநேசவள் கன்னிகள் நாற்பது நேரதாக்காசினி சக்கரத் துள்ளே கலந்தவள்மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

உரை

பாடல் #1403 இல் உள்ளபடி, இறைவிக்குச் சரிசமமாகப் பூஜிக்கத் தகுந்த பத்துப் பொருள்களையும் சூழ்ந்திருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும், நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கிறாள் என்று பாடல் கூறுகிறது. என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்குச் சரிசமமாக அருளுபவர்களாக இருக்கிறார்கள். பாடல் #1401 இல் உள்ளபடி, இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலந்து, அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்குச் சரிசமமாக இருக்கின்ற பத்துப் பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களைத் தீர்க்கும்போது, அதனால் எந்தவிதமான மாசும் வந்து சேராமல், கர்ம வினைகளைத் தீர்த்து உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1403 இல் உள்ளபடி, இறைவிக்குச் சரிசமமாகப் பூஜிக்கத் தகுந்த பத்துப் பொருள்களையும் சூழ்ந்திருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும், நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கிறாள்.

  • வரி 2

    என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்குச் சரிசமமாக அருளுபவர்களாக இருக்கிறார்கள்.

  • வரி 3

    பாடல் #1401 இல் உள்ளபடி, இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலக்கிறார்கள்.

  • வரி 4

    அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்குச் சரிசமமாக இருக்கின்ற பத்துப் பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களை, எந்தவிதமான மாசும் வந்து சேராமல் தீர்த்து, உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1404

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout