திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1405

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திடவேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

உரை

சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளிருந்து, சாதகம் செய்யச் செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதி, சாதகர் இருக்கும் உலகத்தில் இருக்கின்ற உயிர்கள் அனைத்திற்கும் பரந்துசென்று, அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும் என்று பாடல் கூறுகிறது. இதற்கு ஆதாரமாக, சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாகச் சேர்ந்து நிற்கும்படி எண்ணிக்கொண்டே இருக்கின்ற சாதகரின் மனவலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி, மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து, வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாகப் பொழிவது போலவே, சாதகருக்குள் இருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்ற உயிர்களோடும் கலந்தெழுந்து, அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகிறது என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளிருந்து, சாதகம் செய்யச் செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதி,

  • வரி 2

    சாதகர் இருக்கும் உலகத்தில் இருக்கின்ற உயிர்கள் அனைத்திற்கும் பரந்துசென்று, அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும்.

  • வரி 3

    இதற்கு ஆதாரமாக, சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாகச் சேர்ந்து நிற்கும்படி எண்ணிக்கொண்டே இருக்கின்ற சாதகரின் மனவலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி,

  • வரி 4

    மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து, வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாகப் பொழிவது போலவே, சாதகருக்குள் இருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்ற உயிர்களோடும் கலந்தெழுந்து, அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகிறது.

திருமந்திரம் பாடல் #1405

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout