திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1406

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ணி லெழுந்த வகார வுகாரங்கள்விண்ணி லெழுந்து சிவாய நமவென்றுதண்ணி லெழுந்தது காண்பரி தென்றுதான்கண்ணி லெழுந்தது காட்சிதர வென்றே.

உரை

பாடல் #1405 இல் உள்ளபடி, சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்தெழுந்திருக்கும் ஜோதியே, ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும், காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல்படுகிறது என்று பாடல் கூறுகிறது. அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும்போது, இறைவனாகவே 'சிவாயநம' என்று வணங்குபவர்களுக்குக் கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகிறதாகவும் இருக்கிறது. இந்த ஜோதியை உருவமாகப் பார்ப்பது இயலாது என்ற காரணத்தால், உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும்போது, சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்துவந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கிறது என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1405 இல் உள்ளபடி, சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்தெழுந்திருக்கும் ஜோதியே, ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும், காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல்படுகிறது.

  • வரி 2

    அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும்போது, இறைவனாகவே 'சிவாயநம' என்று வணங்குபவர்களுக்குக் கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகிறதாகவும் இருக்கிறது.

  • வரி 3

    இந்த ஜோதியை உருவமாகப் பார்ப்பது இயலாது என்ற காரணத்தால், உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்குகிறார்கள்.

  • வரி 4

    அப்போது சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்துவந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கிறது.

திருமந்திரம் பாடல் #1406

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout