தொடர்ந்து படிக்கread this section continuously
என்றங் கிருந்த வமுதக் கலையிடைச்சென்றங் கிருந்த வமுதப் பயோதரிகண்ட கரமிரு வெள்ளிபொன் மண்டையாய்க்கொண்டங் கிருந்தது வண்ண வமுதமே.
உரைmeaning
பாடல் #1406 இல் உள்ளபடி, தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது, அமிழ்தம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப்பட்ட பகுதிக்குள் சென்று, அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியைத் தரிசித்து, அந்த அமிழ்தத்தையே தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றுகிறது என்று பாடல் கூறுகிறது. அதன்பிறகு, அந்த ஜோதியைத் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச்சென்று, ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும்போது, அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகிறாள் என்று பாடல் முடிக்கிறது.
As verse 1406 says, the practitioner's flame, which dwelt within the souls who worship him as God so as to show their souls the vision of the flame, journeys into the region lying between the crown and the muladhara, where nectar dwells, and there beholds the Goddess who graciously removes the maya of souls through that indwelling nectar, and transforms that very nectar into a flame of golden hue, the verse declares. After that, when that flame is carried up to the sahasrara at the crown and, in the form of a flame, unites with the Goddess who dwells there, her sacred form graciously turns into nectar, the verse closes by declaring.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1406 இல் உள்ளபடி, தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட, அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது அமிழ்தம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப்பட்ட பகுதிக்குள் செல்கிறது.
As verse 1406 says, the practitioner's flame, which dwelt within the souls who worship him as God so as to show their souls the vision of the flame, journeys into the region lying between the crown and the muladhara, where nectar dwells.
- வரி 2Line 2
அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியைத் தரிசிக்கிறது.
There it beholds the Goddess who graciously removes the maya of souls through that indwelling nectar.
- வரி 3Line 3
அந்த அமிழ்தத்தையே தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றுகிறது.
It transforms that very nectar into a flame of golden hue.
- வரி 4Line 4
அதன்பிறகு, அந்த ஜோதியைத் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச்சென்று, ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும்போது, அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகிறாள்.
After that, when that flame is carried up to the sahasrara at the crown and, in the form of a flame, unites with the Goddess who dwells there, her sacred form graciously turns into nectar.
திருமந்திரம் பாடல் #1407





