திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1408

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அமுத மதாக வழகிய மேனிபடிக மதாகப் பரந்தெழு முள்ளேகுமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்கெழுத மதாகிய கேடிலி தானே.

உரை

பாடல் #1407 இல் உள்ளபடி, அமிழ்தமாகவே மாறியிருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது, பளிங்குக் கல்லைப் போலவே உறுதியாகச் சாதகருக்குள் பரந்து விரிந்தெழுந்து, அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன், முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆகி, எந்தவிதமான தீங்கும் இல்லாத சக்தியாக இருக்கிறது என்று பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1407 இல் உள்ளபடி, அமிழ்தமாகவே மாறியிருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது,

  • வரி 2

    பளிங்குக் கல்லைப் போலவே உறுதியாகச் சாதகருக்குள் பரந்து விரிந்தெழுகிறது.

  • வரி 3

    அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆகிறது.

  • வரி 4

    அதற்கு எந்தவிதமான தீங்கும் இல்லாத சக்தியாக இருக்கிறது.

திருமந்திரம் பாடல் #1408

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout