திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1409

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கேடிலி சத்திகள் முப்பத் தறுவருநாடிலி கன்னிக ணாலொன் பதிமரும்பூவிலி பூவித ழுள்ளே யிருந்தவர்நாளிலி தன்னை நணுகிநின்றார் களே.

உரை

பாடல் #1408 இல் உள்ளபடி, எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கிறார்கள் என்று பாடல் கூறுகிறது. சாதகர் தேடி அடையவேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்துவருகின்ற, என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகளும், தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக, சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கிறார்கள். இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கிறார்கள் என்று பாடல் முடிக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1408 இல் உள்ளபடி, எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கிறார்கள்.

  • வரி 2

    சாதகர் தேடி அடையவேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்துவருகின்ற, என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகள்,

  • வரி 3

    தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக, சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கிறார்கள்.

  • வரி 4

    இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கிறார்கள்.

திருமந்திரம் பாடல் #1409

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout